| விண்டோஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் |
இந்தாண்டு இறுதிக்குள் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், 2012ம் ஆண்டுவாக்கில் அதிகளவிலான இந்த போன்களை வர்த்தகப்படுத்த தங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நோக்கியா நிறுவனம் தற்போது மீகோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு என்9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், இதுதான் இந்த தொழில்நுட்பத்திலான முதல் மற்றும் கடைசி ஸ்மார்ட்போன் என அவர் கூறினார். ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் நோக்கியா நிறுவனத்திற்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனும் மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் உபகரணங்களும் பெரும் சவாலாக உள்ளன. அடிபப்டை மொபைல் போன்கள் வர்த்தகத்தில் ஆசிய அளவில் இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனமும், சீனாவின் இசட்டீஈ நிறுவனமும் போட்டியாக உள்ளதாக அவர் கூறினார். இந்த மாதத்தில் ஸ்மார்ட்போன் வர்த்தகம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் முதலிடத்தில் சாம்சங் எலெக்ட்ரானிக்சும், இரண்டாம் இடத்தில் ஆப்பிள் நிறுவனமும் உள்ளது. மூன்றாம் இடத்தில் நோக்கியா நிறுவனம் உள்ளது. மின்னஞ்சல், தகவல், பேக்ஸ் என பல்வேறு சிறப்பம்சங்களை உட்புகுத்தி 1996ம் ஆண்டில் முதலிடத்தில் இருந்த நோக்கியா நிறுவனம் தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பெப்பிரவரி மாதம் வரை மீகோ தொழில்நுட்பத்தை அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களை வர்த்தகம் செய்து வந்த நோக்கியா நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு பிறகு விண்டோஸ் தொழில்நுட்ப அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களை வர்த்தகம் செய்ய திட்டிமிட்டு அதற்கான நடவடிக்கைகளும் துரிதமாக நடைபெற்று வந்தன. இந்தாண்டு இறுதிக்குள் விண்டோஸ் தொழில்நுட்ப அடிப்படையிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய பிறகு மக்களுக்கு இதற்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து 2012ம் ஆண்டில் அதிகளவிலான விண்டோஸ் ஸ்மார்ட்போன்களை அதிகளவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நோக்கியா நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. |
Sunday, June 26, 2011
விண்டோஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்
தினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக உங்களின் ஈமெயிலுக்கே வரும்
இணையத்தில் கட்டண மென்பொருளுக்கு இணையாக வேலை செய்யும் அளவிற்கு இலவச மென்பொருட்கள் இருந்தாலும் அனைவரும் கட்டண மென்பொருளையே விரும்புவார்கள். ஏனென்றால் கட்டண மென்பொருளில் வைரஸ் தாக்கும் அபாயம் இருக்காது மற்றும் நம்முடைய ஈமெயில் கொடுத்து டவுன்லோட் செய்தால் அந்த ஈமெயில்களை பல spam கம்பனிகளுக்கு விற்று விடுவதால் நமக்கு தேவையில்லாத ஈமெயில்கள் வந்து தொந்தரவு செய்யும் அபாயங்கள் இருப்பதோடு கட்டண மென்பொருளில் ஒரே மென்பொருளில் பல வேலைகள் செய்யும் வசதி இருக்கும் ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்களில் இருக்காது ஆகவே அனைவரும் கட்டண மென்பொருட்களை விரும்புகின்றனர்.
- இந்த தளத்தில் தினமும் ஒரு கட்டண மென்பொருளை இலவசமாக அறிமுக படுத்துவார்கள்.
- அந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 24 மணி நேரம் கால அவகாசம் கொடுப்பார்கள் அதற்குள் அந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
- 24 மணி நேரம் கழித்து டவுன்லோட் செய்தால் அந்த மென்பொருளை இலவசமாக பெற முடியாது காசுகொடுத்து தான் வாங்க வேண்டும் ஆக முந்தி கொள்வதே நல்லது.
- இந்த தளத்தில் நாம் உறுப்பினர் நம் ஈமெயிலை கொடுத்து பதிந்து விட்டால் அந்த நாளுக்கான இலவச மென்பொருளை பற்றி நமது ஈமெயிலுக்கே அனுப்பி விடுவார்கள் அந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இன்றைய இலவச மென்பொருள் - டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ததும் கொடுக்கப்படும் ஆக்டிவேசன் கீயை மறக்காமல் காப்பி செய்து மென்பொருளை register செய்து கொண்டால் தான் காலம் முழுவதும் இலவசமாக மென்பொருளை உபயோகிக்க முடியும்.
- ஆனால் இந்த முறையில் உள்ள ஒரு குறை நாம் மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் அந்த பதிப்பில் இருந்து புதிய பதிப்பை அப்டேட் செய்ய முடியாது. அப்டேட் செய்ய வேண்டுமென்றால் காசு கொடுத்து ஆகவேண்டும்.
- இந்த தளத்தில் சைட்பாரில் உள்ள விட்ஜெட்டில் subscribe by Email என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் ஈமெயிலை கொடுத்து பதிந்து கொண்டால் உங்கள் மெயிலுக்கே தினமும் ஒரு இலவச மென்பொருளை பற்றி செய்தி அனுப்புவார்கள்.
இந்த பயனுள்ள தளத்திற்கு செல்ல - www.giveawayoftheday.com
| இளமைக்கு வழிவகுக்கும் பொப்கார்ன் |
பொப்கார்னும், பாலாடைக்கட்டியும்(சீஸ்) உடலை இளமையாக வைத்திருக்கிறது என்று இப்போது தெரியவந்துள்ளது. சமீபத்திய மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு முதுமையை மறைக்க எளிய வழிகளை பட்டியலிட்டுள்ளது. இதில் பிரதான இடம் பெற்றிருப்பது பொப்கார்னும், சீஸும் தான். ஆரோக்கியமான சரிவிகித உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவை உடலை வயது வித்தியாசமின்றி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். புகை மற்றும் மதுப்பழக்கம் இல்லாதவர்கள் ஆரோக்கியமாக இருப்பதுடன் வயது முதிர்வும் தெரியாது. எலும்பு மற்றும் தசைகள், கண், மூளை, இதயம் உள்ளிட்டவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் உடல் மெருகேறும். உணவு, உடற்பயிற்சி, உரிய மருத்துவ அறிவுரைகள் இதற்கு உதவும். மேலை நாடுகளில் மிக பிரபலமாக இருந்த சீஸ் தற்போது நம் நாட்டு உணவுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் மிகவும் நல்லது. இதில் உள்ள அபரிமிதமான கால்சியம், எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. வயது அதிகரிக்கும் போது உடல் மட்டுமின்றி எலும்புகளும் வலுவிழக்கும். இந்த நிலையை சமாளிக்க அதிக அளவு சீஸ் எடுத்துக் கொள்ளலாம். சோயா உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் தசைகள் வலுப் பெறும். மல்டி வைட்டமின்கள், புரதம், தாதுக்கள் நிறைந்த கீரைகள், சாலட் வகைகள், ஆரஞ்சுப்பழம் போன்றவை கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். பெரும்பாலான சத்துகள் உள்ள பொப்கார்ன் உடலுக்கு மட்டுமின்றி இதயத்துக்கும் இதமளிக்கும். சால்மோன் மீன்களில் உள்ள சத்துகள் மூளைக்கு பலம் சேர்க்கும். பொதுவாக 40ஐ கடந்து விட்டவர்களின் அன்றாட உணவில் அதிக வைட்டமின்கள், நார்ச்சத்துகள், சுண்ணாம்பு, புரதம், தாதுக்கள் இடம் பெற வேண்டியது அவசியம் மட்டுமின்றி ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது ஆய்வாளர்கள் தரும் டிப்ஸ். |
செல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்
கண்டிப்பாக இந்த தலைமுறையினர் பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும். எவ்வளவு சொகுசான வாழ்க்கை எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்போன்கள் வசதி இன்னும் பிரமாதம் பெரும்பாலானாவர்கள் இந்த செல்போன்களுக்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதில் உள்ள வசதிகளால் இந்த செல்போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த செல்போன்களில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இந்த செல்போன்களின் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இந்த செல்போன் கதிர் வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் செல்போன் உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விஷயம் நாம் செல்போன் உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
இந்த செல்போன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்று சில வழிமுறைகளை கீழே காண்போம்.

- முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.
- ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.
- குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.
- உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
- காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
- தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
- நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
- செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
- செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
- செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
- செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.
- போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.
மேற்கூறிய முறைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக செல்போன்களின் கதிவீச்சில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.
words in world language
| உங்களது வார்த்தைகளை பல்வேறு மொழிகளில் உடனே மொழிபெயர்ப்பதற்கு |
| [ புதன்கிழமை, 22 யூன் 2011, 04:39.55 மு.ப GMT ] |
இத்தளத்திற்கு சென்று கட்டத்திற்குள் Translate(மொழி மாற்றம்) செய்ய வேண்டிய வார்த்தையை கொடுத்து Go என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். அடுத்து வரும் திரையில் நாம் தட்டச்சு செய்த வார்த்தைகள் 20 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நமக்கு காட்டப்படும். கூகுள் துணையுடன் இது வார்த்தைகளை மொழி பெயர்த்து நமக்கு காட்டுகிறது. ஒவ்வொரு மொழியின் பெயரும் அந்த மொழில் மொழி பெயர்க்கப்பட்ட வார்த்தைகளும் நமக்கு காட்டப்படும். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் URL இணையதள முகவரியை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் மாற்றிய வார்த்தையை அவர்களும் தெரிந்து கொள்ளலாம். இணையதள முகவரி |
ON LINE MP3 cutter:
| ஓன்லைனிலேயே MP3 கோப்புக்களை கட் செய்வதற்கு |
| [ வியாழக்கிழமை, 23 யூன் 2011, 07:04.05 மு.ப GMT ] |
இந்த வேலையை செய்ய நிறைய இலவச மென்பொருட்கள் இருந்தாலும் ஓன்லைனில் இலவசமாக மற்றும் சுலபமாக எப்படி நம்முடைய MP3 கோப்புக்களை வெட்டலாம். இந்த தளம் சென்றவுடன் அங்கு உள்ள Open MP3 என்ற பட்டனை அழுத்தி நீங்கள் வெட்ட வேண்டிய MP3 கோப்பை தேர்வு செய்து கொள்ளுங்கள். நீங்கள் தேர்வு செய்த கோப்பு பதிவேற்றம் ஆகி முடிந்தவுடன் கீழே படத்தில் வட்டமிட்டு காட்டி இருக்கும் கர்சர்களை முன்னும் பின்னும் நகர்த்தி உங்களுக்கு தேவையான பகுதியை தேர்வு செய்து கொள்ளுங்கள். |
சூரிய சக்தியில் இயங்கும் மடிக்கணணி:
| சூரிய சக்தியில் இயங்கும் மடிக்கணணிகள் விரைவில் அறிமுகம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 26 யூன் 2011, 04:27.27 மு.ப GMT ] |
இது NET BOOK NC215S என்ற பெயரில் வெளியிடவுள்ளது. இதன் திரை 10.1 அங்குல அளவுடையது. மேலும் 1GB அளவு RAM MEMORY. இன்டெல் ATOM N570 DUAL CORE செயலியை கொண்டது. வன்தட்டின் கொள்ளளவு 250GB மற்றும் 320GB ஆகும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பற்றரி மூலம் 14 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பாவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 செல் சூரிய சக்தியை சேமிக்கும் பற்றரிகள் உள்ளன. அத்துடன் USB போர்ட் வெப்காம் மற்றும் போன்ற வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. |
Subscribe to:
Comments (Atom)

