Friday, July 15, 2011

இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு:

இணையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பதற்கு

டெக்ஸ்ட் மிரர் சேவை இணைய வன்முறை போன்றது தான். ஆனால் எளிமையையும், சிக்கல் இல்லா தன்மையையும் விரும்புகிறவர்களுக்கு பயனுள்ளது.டெக்ஸ்ட் மிரர் சேவை அப்படி என்ன செய்கிறது என்றால் இணைய பக்கங்களை உள்ளடக்கம் தவிர வேறு எந்த இடையூறுகளும் இல்லாமல் எளிமையாக படிக்க வழி செய்கிறது.
இடையூறுகள் என்றால் இணைய பக்கத்தில் இடம்பெற்றுள்ள விளம்பரங்கள், புகைப்படங்கள் மற்றும் பிற இணைப்புகள் போன்றவை தான். அழகுக்காகவும் அலங்காரத்துக்காகவும் சேர்க்கப்படும் கூடுதல் அம்சங்கள் எல்லாம் நீக்கப்பட்டு கட்டுரை அல்லது செய்தியை மட்டும் படிக்கலாம்.
ஒரு இணைய பக்கம் முழுமை பெறவும் அழகியல் ரீதியாக கவரவும் புகைப்படங்கள் போன்ற‌வை அவசியம். கூடுதல் விவரங்களுக்காக இணைப்புகள் தேவை. வருவாய்க்காக விளம்பரங்கள் வேண்டும். ஆனால் பலர் இந்த‌ அம்சங்களை தேவையில்லாத இடையூறாக, கவன சிதறலாக கருதலாம். குறிப்பாக இணைய விளம்பரங்க‌ளை பலர் வெறுக்கலாம்.
இவற்றை எல்லாம் பொறுத்து கொண்டு தான் இணையத்தில் உள்ள தகவல்களை பெற வேண்டியுள்ள‌து. ஆனால் டிவிடியில் படம் பார்க்கும் போது விளம்பரங்க‌ள் பாடல் காட்சிகளை வேகமாக ஓடவிட்டு பார்ப்பது போல இணைய‌த்திலும் விளம்பரங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை நீக்கிவிட்டு கட்டுரையை மட்டுமே படிப்பதற்கு விரும்பினால் டெக்ஸ்ட் மிரர் இணைய சேவை அதற்கு உதவுகிற‌து.
எந்த கட்டுரையை படிக்க விருப்பமோ அதன் இணைய முகவரியை இந்த தளத்தில் சம‌ர்பித்தால் போதும் உடனே அனைத்து இடையூறுகளையும் நீக்கிவிடும்.
இணையதள நிர்வாகிகள் மிகவும் ஈட்டுபாட்டோடு பார்த்து சேர்த்து அழகாக வடிவமைக்கும் தளத்தை இப்படி அந்த அம்சஙக்ளை எல்லாம் நீக்கி பார்ப்பது லேசான் வன்முறை தான். இருந்தாலும் எளிமையை விரும்புகிற‌வர்களுக்கும், நேரடியாக‌ விஷயத்தை பெற நினைப்பவர்களுக்கும் இந்த‌ சேவை பயனுள்ள‌தாக இருக்கும்.
அதிலும் ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்களும் கட்டுரையை மட்டுமே படிக்க உதவும் இந்த சேவையை மிகவும் விரும்பக்கூடும். அதே போல எதையுமே செய்திதாளில் படித்து பழகிய கடந்த தலைமுறையை சேர்ந்தவர்களும் இந்த‌ சேவையை விரும்புவார்கள்.
மேலும் இரண்டு விதங்களில் இந்த சேவையை பயன்ப‌டுத்தலாம். ஏதாவது இணையதளம் பிளாக் செய்யப்பட்டிருந்தால் அதன் முகவரியை இதில் சமர்பித்து அதில் உள்ள கட்டுரைகளை மட்டும் படிக்கலாம்.
அதே போல எந்த கட்டுரையாவது மிக நீள‌மாக இருந்தால் அதனை இங்கு சம‌ர்பித்து ஒரே பார்வையில் அதில் உள்ல விஷயங்க‌ளை பார்த்து படிக்கலாமா வேண்டாமா என தீர்மானித்து கொள்ளலாம்.
டெக்ஸ்ட் மிரர் தளத்திற்கு சென்றால் நமக்கு தேவையான பக்கங்களை சம‌ர்பிப்பதோடு ஏற்கனவே சம‌ர்பிக்கப்பட்ட பக்கங்களையும் பார்க்கலாம். அந்த பக்கங்களை தேடியும் பார்க்க‌லாம். முகவரிகள், கட்டுரை வாசகங்கள், திகதி ஆகியவற்றின் அடிப்படையில் தேடலாம்.
இணையதள முகவரி

Saturday, July 9, 2011

விண்டோஸ் 8

விண்டோஸ் 8 பற்றிய புத்தம் புது தகவல்கள்
விண்டோஸ் 8 குறித்த ஏதேனும் புதிய செய்திகளை மைக்ரோசொப்ட் தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கிறது.கணணி பயன்படுத்துவோரில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மொனிட்டர்களை வைத்துப் பயன்படுத்துவார்கள்.
இந்த பயன்பாடு பல வசதிகளைத் தரும். ஒருவர் இயக்க பலர் கவனிக்க வேண்டிய செயல்பாடுகள், கற்றுத் தருவதற்கான வழிகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு இது உறுதுணையாக இருக்கும். ஆனால் இதில் ஒரு சில இழப்புகளும் இருந்தன.
குறிப்பாக கணணிக்கான நேரடி இணைப்பு பெற்ற மொனிட்டர் தவிர மற்றவற்றில் டாஸ்க் பார் கிடைக்காது. இந்த குறை இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நீக்கப்பட்டுள்ளது.
கணணியுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து மொனிட்டர்களிலும், டாஸ்க் பார் தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளது. “Multiple Display” என்ற புதிய பிரிவு, “Taskbar Properties” டயலாக் பாக்ஸில் தரப்படுகிறது.
இவற்றின் மூலம் மற்ற மொனிட்டர்களில் டாஸ்க் பார் காட்டப்படும் எனத் தெரிகிறது. ஆனால் அனைத்து செயல்படும் ஐகான்களும் காட்டப்படுமா அல்லது அடிப்படையில் முதலில் தோன்றும் ஐகான்கள் மட்டும் கிடைக்குமா என இனிமேல் தான் தெரிய வரும்.

Thursday, July 7, 2011

உங்களுக்கு பிடித்த வண்ணத்தில் இணையத்தை மாற்றம் செய்வதற்கு

உங்களுக்கு பிடித்த வண்ணத்தில் இணையத்தை மாற்றம் செய்வதற்கு

தினமும் இணையதளம் படிக்கும் வாசகர்கள் பல பேர் இருக்கின்றனர். இவர்களில் சில பேர் சில இணையதளங்களின் வண்ணம் சரியாக இல்லையே என்று குறைபடுவதுண்டு.இனி அந்த கவலை வேண்டாம். நமக்கு பிடித்த இணையதளத்தை நமக்கு பிடித்த வண்ணத்தில் மாற்றி படிக்கலாம். தினமும் பல்லாயிரக்கணக்கான இணையதளங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சில தளங்கள் பார்ப்பதற்கு அழகாக தெரியும்.
அதில் இருப்பது போல் வண்ணம் நம் தளத்தில் அல்லது பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தில் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று நமக்கென்று புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு நொடியில் உருவாக்கி கொண்டு இந்த சேவையை பயன்படுத்தலாம். Enter Url என்பதை சொடுக்கி நாம் வண்ணத்தை மாற்ற விரும்பும் தளத்தின் முகவரியை கொடுத்து Proceed என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்.
அடுத்து வரும் திரையில் வலது பக்கம் இருக்கும் Hue, Saturation, Lightness,C ontrast, redness, Greenness, Blueness போன்றவற்றில் நமக்கு பிடித்தவாறு கலர் மாற்றம் செய்து Proceed என்ற பொத்தானை சொடுக்கி அடுத்து வரும் திரையில் Download Result என்பதை சொடுக்கி எளிதாக தரவிறக்கலாம்.
இணையதள முகவரி

Sunday, July 3, 2011

கனவுகளும் பலன்களும்

தூக்கத்தில் வரும் கனவுகள் பலிக்குமா?

என் பாட்டி ஒருவரிடம் உறவுக்கார அண்ணன் ஒருவன் கூறினான்."அந்த பெண்ணுடன் எனக்கு கல்யாணம் ஆவது போல கனவு கண்டேன்". பாட்டியின் மறுமொழி "அது கனவில்லை உன் நெனப்பு " அண்ணா பதில் பேசவில்லை.அதே பாட்டியுடன் ஒரு நாள் பயணம் செய்து கொண்டிருந்தேன்.பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு அம்மாள் சொன்னார்,''சுவர் இடிந்து விழுவதுபோல க்கனவு கண்டேன் என்னவென்று தெரியவில்லை.பாட்டி சொன்னார் "உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நலம் இல்லையா? ஏதாவது கெட்ட சம்பவம் நடந்தாலும் நடக்கும்''.

                                                                     இதை நான் வித்தியாசமாக உணர்ந்தேன்.அதன் பின்னர்கனவுகள் பற்றி  ஏராளமான கிராமப்புற நம்பிக்கைகள் இருப்பதை தெரிந்து கொண்டேன்.அழுத்தமான கனவுகள் காணும்போது பெரியவர்களிடம் விவாதிப்பதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார்கள்.



                                                               பஞ்சாங்கங்
களில் கனவுகள் பற்றி கூறப்பட்டுள்ளன.கனவுகளுக்கு பலன்கள் சொல்லும் கட்டுரைகளும்,புத்தகங்களும் நிறைய உண்டு.இவையெல்லாம் மரபு சார்ந்தவை.அறிவியல் பூர்வமான அணுகுமுறை அல்ல! இதில் மூத்தவர் சிக்மன்ட் பிராய்ட் .உலகம் போற்றும் ,உலகின் கண்களைத்திறந்த உளவியல் அறிஞர் .ஒருவரது மனதில் உள்ள ஆசைகளும் ,ஏக்கங்களும் கனவுகளாக வரலாம்.துவக்கத்தில் பாட்டி சொன்ன மாதிரி.

                                                               ஆழ மனதில் பதிந்திருப்பவை கனவுகளாக வெளியேறி விடுகின்றன.வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சியான சம்பவங்கள் கனவுகளாக சிலருக்கு தொடர்ந்தது வந்துகொண்டிருக்கும்.அவர் மனம் பாதிக்கப்பட்டு இருப்பதன் அறிகுறி இது.வாழ்வில் தீர்க்க முடியாத பிரச்சினைகளை கனவில் கண்டவர்கள் உண்டு! 



                                                               தையல் மெஷினை வடிவமைத்த சிங்கர் கனவு கண்டே மெஷினை இறுதி செய்தார் என்பதை படித்திருக்கிறேன்.இதுவும் உங்கள் நனவின்றியே இயங்கும் மனதின் வேலைதான்.தூக்கத்திலும் சிந்தித்து கனவாய் வெளிப்பட்டு விடுகிறது.வேறு சில உதாரனங்களும் இருக்கின்றன.தொலைந்துபோனதை கனவில் பார்த்து கண்டெடுத்தவர்கள் உண்டு.

                                                                 கிராமத்து தேநீர் கடையில் அமர்ந்து கொண்டிருந்தேன்.பேருந்து விட்டு இறங்கி வந்த பெரியவர் கேட்டார்.இங்கே கிருஷ்ணன் இருக்கிறாரா? அவருக்கு எண்பது வயது இருக்கும்.எந்த கிருஷ்ணன்? இன்ன சமூகத்தை சேர்ந்தவர்.நான்தான் என்று அவர் எழுந்து வந்தார்.பெரியவர் கடவுளே என்று வானத்தை நோக்கி கும்பிட்டார்.பெரியவர் பிறகு சொன்னது அங்கே இருந்த எல்லோருக்கும் ஆச்சர்யம்.



                                                                 கோயில் கட்ட எண்ணியதாகவும் ,இரவு கனவில் தேவதை வந்து ஊர் பெயரை சொல்லி அங்கே சென்று டீக்கடையில் கிருஷ்ணன் என்ற பெயர் சொல்லி கேட்குமாறு கட்டளையிட்டதாக கூறினார்.பக்கத்து மாவட்டத்தை சார்ந்தவர் அவர்.இருவரும் இதற்கு முன்பு சந்தித்ததில்லை.சிலர் அந்த பெரியவருக்கு யாராவது சொல்லியிருப்பார்கள் என்றார்கள்.பெரியவரை பார்த்தால் பொய் சொல்கிற ஆளாக தெரியவில்லை என்றார்கள் சில பேர்.

                                                                 எப்படியோ தினமும் இரவுகளில் கனவு கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.பெரும்பாலான கனவுகளும் சிம்பாலிக்காகவே வரும் என்கிறார்கள்.நேரடியாக இருக்காது.உதாரணமாக நீங்கள் யாரையாவது காதலிக்க முடிவு செய்தால் உங்கள் கனவில் விஜயோ,அஜீத்தோ டூயட் பாடுவதுபோல கனவு வரலாம்.

உங்களது மென்பொருளை பிறர் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க:

உங்களது மென்பொருளை பிறர் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க

கணணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று எண்ணலாம்.சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் சூழ்நிலையில் இந்த மாதிரி கட்டுப்படுத்தும் செயல் அவசியமானது. இதனை நீங்கள் Group Policy Editor மூலமாகவும் செய்யலாம்.
ஆனால் எளிமையாக கையாள இலவச மென்பொருள் Appadmin உள்ளது. முக்கியமான மென்பொருள்களை எவரும் பயன்படுத்த முடியாதபடி இந்த மென்பொருள் மூலம் எளிமையாக செய்யலாம்.
இது மென்பொருள்களுக்கு கடவுச்சொல் கொடுத்து(password protect) அதை முடக்குகிறது. இதன் கடவுச்சொல் தெரிந்தவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். இதில் முதலில் உங்களுக்கான கடவுச்சொல்லை கொடுத்து விட வேண்டும்.
பின் Block என்பதை கிளிக் செய்தால் எந்த மென்பொருளை தடை செய்கிறீர்களோ அதனை தேர்வு செய்துவிட வேண்டும். மேலும் இன்னொரு வசதியாக எந்த மென்பொருளையும் இதன் விண்டோவில் இழுத்து விட்டால்(Drag and drop) கூட போதும்.
தரவிறக்க சுட்டி

இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்.....!!

இணைய முகவரியில் புதிய துணைப் பெயர்கள்

இணைய தளங்களுக்கான முகவரியில் துணைப் பெயராக மேலும் பல புதிய வகை பெயர்களை அமைக்க இதற்கான பன்னாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. இந்த பெயர்களை generic toplevel domains என அழைக்கின்றனர்.தொடக்கத்தில் .com, .org, and .net போன்ற பொதுவான பெயர்களே தளப்பெயர்களின் துணைப் பெயர்களாக இருந்து வந்தன. பின்னர் நாடுகளின் அடையாளம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று, .uk and .in என நாடுகளின் பெயர்களும் அனுமதிக்கப்பட்டன.
தொழில் வகைப் பெயர்களாக .biz போன்றவையும் வரத் தொடங்கின. இவ்வகையில் இதுவரை மொத்தம் 22 வகை துணைப் பெயர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
அண்மையில் கூடிய இத்தகைய பெயர்களை அனுமதித்து கண்காணித்து வரும் ஐகான்(ICANN –Internet Corporation for Assigned Names and Numbers) அமைப்பு கூடுதலாகச் சில வகைப் பெயர்களை அமைக்க அனுமதி தந்துள்ளது.
இதன் மூலம் ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளிலும் புதிய வகைகளிலும் இந்த பெயர்களை அமைக்கலாம். இதன்படி ஒரு நிறுவனம் தன் நிறுவனத்தை அடையாளம் காட்டும் வகையில் பெயரை அமைத்துக் கொள்ளலாம். நிறுவனப் பெயர் மட்டுமின்றி குறிப்பிட்ட தன் தயாரிப்பு ஒன்றின் பெயரைக் காட்டும் அடையாளப் பெயர்களையும் வைத்துக் கொள்ளலாம்.

UPDATE UR WINDOWS DRIVE....

விண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்வதற்கு

விண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்ய இணையத்தில் ஏராளமான மென்பொருள்கள் உள்ளன.Smart Driver Updater என்ற மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் மூலம் இணையத்தின் உதவியுடன் ட்ரைவர்களை அப்டேட் மற்றும் புதியதாகவும் நிறுவிக் கொள்ள முடியும்.
மேலும் இந்த Smart Driver Updater உதவியுடன் ட்ரைவர்களை பக் அப் மீண்டும் கணணியில் நிறுவிக் கொள்ள முடியும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Start Scan என்னும் பொத்தானை அழுத்தி கணணியில் உள்ள ட்ரைவர்களை ஸ்கேன் செய்யவும். தற்போது விடுபட்ட ட்ரைவர்களை பட்டியலிடும்.
பின் வேண்டிய ட்ரைவர்களை இணையத்தின் உதவியுடன் உங்கள் கணணியில் பதிவேற்றம் செய்து கொள்ளவும். வேண்டுமெனில் ட்ரைவர்களை பக் அப் செய்து கொள்ளவும் முடியும்.
இந்த மென்பொருள் மூலம் பக் அப் செய்து மீண்டும் ட்ரைவர்களை எளிமையாக நிறுவிக் கொள்ள முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.
தரவிறக்க சுட்டி

Saturday, July 2, 2011

face book Vs google....??

பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் ப்ளஸ் அறிமுகம் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 30 யூன் 2011, 04:26.07 மு.ப GMT ]
இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம் பேஸ்புக்கிற்கு போட்டியாக "கூகுள் பிளஸ்" என்ற சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது: சமூக இணையத்தளம் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு க‌ாட்டி வருகின்றனர்.
அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக சமூக இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது கூகுள் பிளஸ் என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இந்த புதிய சமூக இணையத்தளம் பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போதிலும் அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும்  கைத்தொலைபேசிகள் விற்கும் விற்பனை மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போதைய அளவில் சோதனைக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும் வருங்காலங்களில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கிள்கள், பேஸ்புக்கின் தகவல் பகிர்ந்து கொள்ளும்( இன்பர்மேசன் ஷேரிங்) சேவையை ஒத்திருத்தாலும், இது பேஸ்புக்கைப் போல தனது தகவலை அனைவருக்கும் தெரிவிக்காமல் உப‌யோகிப்பாளருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் தொழில்நுட்பமுறையில் இங்கு பொட்டோக்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதால் இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத்தியமாகிறது.
இது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக அதுவும் பேஸ்புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவையின் மூலமே சாத்தியமாகி உள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.
600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சமூக இணையதள உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ்புக்கிற்கு தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

send anonynous sms



இந்திய மொபைல்களுக்கு Anonymous SMS இலவசமாக அனுப்ப

இப்பொழுது மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து அசுர வளர்ச்சி அடைந்து கொண்டு வருகிறது. பெரியவர்கள் முதல் பள்ளிக்கு செல்லும் சிறியவர்கள் வரை அனைவரும் போன்களை உபயோகிக்கின்றனர். கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைய சமூகத்தினர் மொபைல் போன்களில் விரும்பி உபயோகிப்பது SMS (Short Messaging Service) என்ற குறுஞ்செய்தி வசதியை தான்.

இதற்காகவே நிறைய பேர் மொபைல் போன்களை வாங்குகின்றனர். இது போன்று SMS அனுப்பினால் காசு போவதோடு நம் நம்பரும் அனுப்புவர்களுக்கு தெரிந்துவிடும். பசங்கள சும்மா வெறுப்பேத்த நம்முடைய மொபைல் போன் நம்பரை மறைத்து எப்படி Anonymous SMS அனுப்புவது என்று காண்போம். இந்த சேவை முற்றிலும் இலவச சேவையே. 

உங்களுடைய நம்பர் தெரியாது என்று ஏதாவது விபரீத SMS அனுப்பலாம் என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால் அந்த எண்ணத்தை மறந்து விடுங்கள். நம்பர் தெரியாதே தவிர நீங்கள் உபயோகிக்கும் கணினியின் அனைத்து விவரங்களும் இதில் சேமிக்கப்படும் அதை வைத்து உங்களை சுலபமாக கண்டுபிடிக்க முடியும் என்பதை மறக்க வேண்டாம்.
  • இந்த சேவையை Smsti தளம் நமக்கு வழங்குகிறது. இதில் நீங்கள் உறுப்பினர் ஆகவேண்டிய அவசியமில்லை.
  • இந்த தளத்திற்கு சென்றவுடன் ஒரு சிறிய விண்டோ இருக்கும் அதில் நீங்கள் நீங்கள் SMS அனுப்பவேண்டிய இந்திய நம்பரை முதல் கட்டத்தில் கொடுங்கள்
  • அடுத்து கீழே இருக்கும் கட்டத்தில் உங்களுடைய செய்தியை டைப் செய்து கொள்ளுங்கள்.
  • இதில் 160 character வரை சேர்க்கலாம்.
  • முடிவில் கீழே இருக்கும் Send பட்டனை அழுத்துங்கள்.
  • Send பட்டனை அழுத்தியவுடன் அடுத்து உங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி வரும் அதில் மட்டும் அந்த பக்கத்தில் உள்ள verification நம்பரை சரியாக கொடுத்து கீழே உள்ள Agree to Terms என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் சம்ஸ் நீங்கள் கொடுத்த நம்பருக்கு சென்று விடும். 
  • இந்த முறையில் நீங்கள் ஒரு நாளைக்கு எதனை முறையாவது SMS இலவசமாக அனுப்பி கொள்ளலாம்.
மீண்டும் கூறுகிறேன் உங்களுடைய நம்பர் தெரியாது என்று ஏதாவது விபரீத SMS அனுப்பலாம் என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால் அந்த எண்ணத்தை மறந்து விடுங்கள். நம்பர் தெரியாதே தவிர நீங்கள் உபயோகிக்கும் கணினியின் அனைத்து விவரங்களும் இதில் சேமிக்கப்படும் அதை வைத்து உங்களை சுலபமாக கண்டுபிடிக்க முடியும் என்பதை மறக்க வேண்டாம்.