| விண்டோஸ் 8 பற்றிய புத்தம் புது தகவல்கள் |
| விண்டோஸ் 8 குறித்த ஏதேனும் புதிய செய்திகளை மைக்ரோசொப்ட் தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கிறது.கணணி பயன்படுத்துவோரில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மொனிட்டர்களை வைத்துப் பயன்படுத்துவார்கள். இந்த பயன்பாடு பல வசதிகளைத் தரும். ஒருவர் இயக்க பலர் கவனிக்க வேண்டிய செயல்பாடுகள், கற்றுத் தருவதற்கான வழிகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு இது உறுதுணையாக இருக்கும். ஆனால் இதில் ஒரு சில இழப்புகளும் இருந்தன. குறிப்பாக கணணிக்கான நேரடி இணைப்பு பெற்ற மொனிட்டர் தவிர மற்றவற்றில் டாஸ்க் பார் கிடைக்காது. இந்த குறை இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நீக்கப்பட்டுள்ளது. கணணியுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து மொனிட்டர்களிலும், டாஸ்க் பார் தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளது. “Multiple Display” என்ற புதிய பிரிவு, “Taskbar Properties” டயலாக் பாக்ஸில் தரப்படுகிறது. இவற்றின் மூலம் மற்ற மொனிட்டர்களில் டாஸ்க் பார் காட்டப்படும் எனத் தெரிகிறது. ஆனால் அனைத்து செயல்படும் ஐகான்களும் காட்டப்படுமா அல்லது அடிப்படையில் முதலில் தோன்றும் ஐகான்கள் மட்டும் கிடைக்குமா என இனிமேல் தான் தெரிய வரும். |
Saturday, July 9, 2011
விண்டோஸ் 8
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
just leave a msg hear.....!!